/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஓசூர் டாடா 'ஐ - போன்' உற்பத்தி ஆலை நவம்பரில் உற்பத்தியை துவக்க வாய்ப்பு

ADDED : ஆக 20, 2024 02:45 AM

ஓசூர்:ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின், 'ஆப்பிள் ஐபோன்' உற்பத்தி ஆலை, நவம்பர் மாதம் தன் உற்பத்தியை துவக்கும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் ஓசூரில் கிட்டத்தட்ட 250 ஏக்கரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்திக்கான ஆலையை அமைத்துள்ளது.
இந்த ஆலையில், வரும் நவம்பர் மாதம் முதல் உற்பத்தி துவங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தொழிற்சாலையின் வாயிலாக 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், குறிப்பாக பெண்கள் பெரும்பான்மையோர் இதில் வேலைவாய்ப்பை பெறுவர் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்புக்கான 4வது உற்பத்தி ஆலையாகவும், டாடாவின் இரண்டாவது ஆலையாகவும் இது உள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் பாக்ஸ்கானின் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி ஆலைக்கு அடுத்தபடியாக, இந்த ஆலை இரண்டாவது இடத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 5 கோடி ஐ - போன்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனமும், அதன் துணை தயாரிப்பு நிறுவனங்களும் இலக்கு நிர்ணயித்துள்ளன.