/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஏ.டி.எம்., கார்டை முடக்குவது எப்படி?
/
ஏ.டி.எம்., கார்டை முடக்குவது எப்படி?
ADDED : ஆக 04, 2024 11:56 PM

ஏ.டி.எம்,, அல்லது கிரெடிட் கார்டு தொலைந்து போனால் அல்லது திருடு போனால் உடனடியாக கார்டை முடக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் தவறான பயன்பாட்டை தடுக்கலாம்.
டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை தவறவிடுவது ஒரு பிரச்சனை என்றால் அந்த கார்டு விஷமிகளால் தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பது பெரிய பிரச்சனை ஆகும். எனவே, கார்டை தவறவிட்டால் உடனே அதை முடக்க வேண்டும். கார்டு திருடப்பட்டாலும் இது அவசியம்.
கார்டை முடக்க வங்கிகள் பல விதமான வழிகளை அளிக்கின்றன. வங்கிகள் இதற்கு என அளிக்கு அவசர உதவி எண்ணை அழைத்து கார்டை முடக்க கோரலாம். அப்போது கேட்கப்படும் முக்கிய விபரங்களை முறையாக அளிக்க வேண்டும். மேலும் இணைய வங்கிச்சேவை மூலமும் கார்டை முடக்க நடவடிக்கை எடுக்கலாம்.
இதே போல வங்கிகள் குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் தெரிவித்து கார்டை முடக்க வழி செய்கின்றன. இதற்கான வழிமுறைகளை அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வங்கியும் ஒருவிதமான வழியை பின்பற்றினாலும், அடிப்படையில் முடக்குவதற்கான ஆங்கில சொல்லை அனுப்பி வைக்க வேண்டும். இவைத்தவிர வங்கி கிளைகளையும் நேரடியாக அணுகலாம்.