/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இறக்குமதி அதிகரிப்பால் இந்திய ஸ்டீல் சந்தை பாதிப்பு
/
இறக்குமதி அதிகரிப்பால் இந்திய ஸ்டீல் சந்தை பாதிப்பு
இறக்குமதி அதிகரிப்பால் இந்திய ஸ்டீல் சந்தை பாதிப்பு
இறக்குமதி அதிகரிப்பால் இந்திய ஸ்டீல் சந்தை பாதிப்பு
ADDED : ஆக 26, 2024 12:54 AM

புதுடில்லி:நியாயமற்ற இறக்குமதி மற்றும் தேவையற்ற குவிப்பால், இந்திய ஸ்டீல் சந்தை பாதிக்கப்பட்டுள்ளதாக, அத்துறையின் முன்னாள் செயலர் நாகேந்திர நாத் சின்ஹா தெரிவித்தார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், குறிப்பிட்ட காலத்திற்குள் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சீன சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, இந்திய ஸ்டீல் சந்தையை பாதித்திருப்பதாக கூறிய சின்ஹா, அதிகரித்துள்ள இறக்குமதியால், ஸ்டீல் தயாரிப்பாளர்களின் லாபம் பாதித்துள்ளதாக தெரிவித்தார்.
அலாய் மற்றும் அலாய் அல்லாத ஸ்டீல் அதிகளவில் இந்தியாவில் இறக்குமதி வாயிலாக குவிக்கப்படுவது குறித்து, மத்திய வர்த்தக அமைச்சகம் விசாரணையை துங்கியுள்ள நிலையில், நாகேந்திர நாத் சின்ஹாவின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.