உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 07, 2024 01:53 AM

அ நிறம் | அளவு
மும்பை:மும்பை பங்குச் சந்தையின், துணை நிறுவனமான 'ஆசியா இண்டெக்ஸ்', திங்களன்று 'சென்செக்ஸ் நெக்ஸ்ட் 30' என்ற புதிய குறியீட்டை அறிமுகம் செய்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெறாத, 'பி.எஸ்.இ., 100' குறியீட்டில் இடம்பெற்றுள்ள முன்னணி நிறுவனங்களின் செயல் திறனை, புதிய குறியீடு கண்காணிக்கும்.
இதில் நிதிச்சேவைகள், நுகர்வோர், மின்சாரம், கமாட்டிட்டீஸ், ஹெல்த்கேர், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஒன்பது துறைகளைச் சேர்ந்த 30 நிறுவனங்கள், அதன் சந்தை மதிப்பின் அடிப்படையில் இடம்பெறும்.
