/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஜூலை ஜி.எஸ்.டி., ரூ.1.82 லட்சம் கோடி
/
ஜூலை ஜி.எஸ்.டி., ரூ.1.82 லட்சம் கோடி
ADDED : ஆக 02, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ஜூலை மாத ஜி.எஸ்.டி., வசூல் 1.82 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக, மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்து உள்ளது.
நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஜூலை மாதத்தில் ரீபண்டு தொகை 16,283 கோடி ரூபாயாக உள்ளது. ரீபண்டுகளை கணக்கில் எடுத்து கொண்டது போக, நிகர ஜி.எஸ்.டி., வசூல் 1.66 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இதில், உள்நாட்டு பரிவர்த்தனைகளின் பங்களிப்பு 1.34 லட்சம் கோடி ரூபாய்; இறக்குமதி பரிவர்த்தனைகளின் பங்களிப்பு 48,039 கோடி ரூபாயாகவும் உள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.