/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சிறு தொழில்களுக்கு மின் கட்டண விகிதம் மாற்றி தராததால் இழப்பு
/
சிறு தொழில்களுக்கு மின் கட்டண விகிதம் மாற்றி தராததால் இழப்பு
சிறு தொழில்களுக்கு மின் கட்டண விகிதம் மாற்றி தராததால் இழப்பு
சிறு தொழில்களுக்கு மின் கட்டண விகிதம் மாற்றி தராததால் இழப்பு
ADDED : ஆக 23, 2024 01:36 AM

சென்னை:“சிறு தொழில்களுக்கு ஏற்படும் இழப்பை தடுக்க, மின் கட்டண விகிதத்தை மின் வாரியம் விரைவாக மாற்றி தர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழக மின் வாரியம், சிறு, குறுந்தொழில்களுக்கு மின் கட்டண விகிதம், '3ஏ1' பிரிவில் யூனிட்டிற்கு, 4.80 ரூபாய் மின் கட்டணம் வசூலிக்கிறது. '3பி' பிரிவில் ஆலைகளுக்கு யூனிட், 8 ரூபாய் மின் கட்டணம்.
கடந்த இரு ஆண்டுகளாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க கோரி தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டது. இதனால், 12 கிலோ வாட் வரை மின் இணைப்பு பெற்றுள்ள தொழில்களுக்கு, '3பி' கட்டண விகிதத்தில் இருந்து, '3ஏ1' பிரிவுக்கு மாற்ற, 2023 நவம்பரில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.
இதுவரை மின் வாரியம், கட்டண விகிதத்தை மாற்றவில்லை. இதுகுறித்து கேட்டால், விண்ணப்பித்தால் விகிதத்தை மாற்றுவதாக மின் வாரியம் தரப்பில் கூறப்படுகிறது. பலருக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க தெரியவில்லை.
இதனால், 1.50 லட்சம் தொழில் நிறுவனங்களுக்கு, 145 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆலையும், எந்த கட்டண விகிதத்தில் இடம்பெறுகின்றன என்ற விபரம் மின் வாரியத்திடம் உள்ளது. எனவே, மின் வாரியமே கட்டண விகிதத்தை மாற்ற வேண்டும்.
அதிகம் வசூலிக்கப்பட்ட தொகையை நிறுவனங்களிடம் திருப்பி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மின் துறை பொறியாளர் அமைப்பு தலைவர் காந்தி கூறுகையில், 'காற்றாலை மின்சாரத்திற்கான, 'பேங்கிங்' முறையால் மின் வாரியத்திற்கு ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது; எனவே, பேங்கிங் முறையை அமல்படுத்த கூடாது' என்றார்.