/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பணப்பரிவர்த்தனை சேவை களமிறங்கியது 'ஜோஹோ'
/
பணப்பரிவர்த்தனை சேவை களமிறங்கியது 'ஜோஹோ'
ADDED : ஆக 30, 2024 01:46 AM

மும்பை:சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மென்பொருள் சேவை நிறுவனமான 'ஜோஹோ கார்ப்பரேஷன்', புதிதாக பேமென்ட்ஸ் சேவையில் களமிறங்கி உள்ளது.
மும்பையில் நடைபெற்று வரும் 'குளோபல் பின்டெக்' நிகழ்ச்சியில் பங்கேற்ற 'ஜோஹோ கார்ப்பரேஷன்', தொழில் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து எளிதாக ஆன்லைனில் பணம் பெறும் வகையில், 'பாரத் பில் பேமென்ட்ஸ்' அமைப்பில் இணைந்து, 'ஜோஹோ பேமென்ட்ஸ்' சேவையை துவங்கி இருப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து 'ஜோஹோ' நிறுவனத்தின் உலகளாவிய நிதி மற்றும் செயல்பாட்டு பிரிவின் தலைவர் சிவராமகிருஷ்ணன் ஈஸ்வரன் தெரிவித்ததாவது:
தொழில் நிதி, வங்கிச்சேவை மற்றும் பேமென்ட் சேவைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதனை செயல்படுத்தும் வகையில், எங்கள் செயலிகளில், முன்னணி வங்கிகளுடன் ஒன்றிணைந்து, இணைக்கப்பட்ட வங்கி சேவையை துவங்கி உள்ளோம். இன்று 'ஜோஹோ பேமென்ட்ஸ்' சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் வாயிலாக, வணிகங்களுக்கு இடையே பரிவர்த்தனை சாத்தியமாவதால், நாங்கள் எங்கள் இலக்கை எட்ட முடியும்.
ஜோஹோ பேமென்ட்ஸ் வாயிலாக, வணிக நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில், யு.பி.ஐ.,வாயிலாக 35 வங்கி இணையச்சேவை மற்றும் அட்டைகள் வாயிலாக பணத்தை பெற முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

