UPDATED : மார் 22, 2024 12:00 PM
ADDED : மார் 22, 2024 12:00 AM

கடந்த 2016ம் ஆண்டு துவங்கப்பட்ட டி.ஏ.சி., இன்போசெக், பாதிப்பு மேலாண்மை மற்றும் மதிப்பீடு, இணைய பாதுகாப்பு அளவீடு மற்றும் ஊடுருவல் சோதனை உள்ளிட்டவற்றுக்கு, இடர் அடிப்படையிலான மென்பொருள் தீர்வுகளை வழங்குகிறது.
வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசு கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்டவை, இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் அடங்கும். எச்.டி.எப்.சி., பந்தன் வங்கி, என்.பி.சி.ஐ., உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அடங்கும்.
நிதி நிலவரம்
கடந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 531 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 195 கோடி ரூபாய்.
துவங்கும் நாள்			: 27.03.24
முடியும் நாள்			: 02.04.24
பட்டியலிடும் நாள்			: 05.04.24
பட்டியலிடப்படும் சந்தை	: என்.எஸ்.இ., -- 			  எஸ்.எம்.இ.,
பங்கு விலை			: ரூ.100 - 106
பங்கின் முகமதிப்பு			: ரூ.10
புதிய பங்கு விற்பனை	: ரூ.29.99 கோடி
திரட்டப்படவுள்ள நிதி		: ரூ.29.99 கோடி

