/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
புதிய பங்கு வெளியீடு எல்.ஜி., நிறுவனம் தீவிரம்
/
புதிய பங்கு வெளியீடு எல்.ஜி., நிறுவனம் தீவிரம்
ADDED : செப் 14, 2024 11:59 PM

புதுடில்லி:தென் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி., நிறுவனத்தின் இந்திய பிரிவு, புதிய பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 8,300 கோடி ரூபாய் முதல் 12,450 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக வங்கிகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மின்னணுவியல் பிரிவில் 6.30 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை வரும் 2030க்குள் எட்ட, எல்.ஜி., இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அந்த முயற்சியில் ஒரு பகுதியாக, பங்கு வெளியிட்டு நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. நிதி திரட்டலுக்குப் பின், நிறுவனத்தின் இந்திய பிரிவின் சந்தை மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 1.09 லட்சம் கோடி ரூபாயை எட்டக்கூடும்.
செபியிடம் அடுத்த மாதம் விண்ணப்பம் தாக்கல் செய்யவும்; அடுத்தாண்டு துவக்கத்தில் பங்கு வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய பங்கு வெளியீட்டை நிர்வகிப்பது குறித்து 'பேங்க் ஆப் அமெரிக்கா, சிடி குழுமம், ஜே.பி., மார்கன், மார்கன் ஸ்டான்லி' உள்ளிட்ட வங்கிகளுடன் ஏற்கனவே பேச்சு நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்திய வங்கிகளுடனும் பேச்சு நடத்தப்படும் என தெரிகிறது.