/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரூ.87,695 கோடி நிலுவை தொகை வோடபோனுக்கு 5 ஆண்டு சலுகை அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

ADDED : ஜன 01, 2026 01:29 AM

புதுடில்லி: 'வோடபோன் ஐடியா' நிறுவனம், அரசுக்கு செலுத்தவேண்டிய ஏ.ஜி.ஆர்., எனும் 'சரிக்கட்டப்பட்ட மொத்த வருவாய்' மீதான கட்டண நிலுவையை செலுத்த, ஐந்து ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.
வோடபோன் நிறுவனம், அரசுக்கு 87,695 கோடி ரூபாய்க்கு கட்டண பாக்கி வைத்துள்ளது. கடன் சுமையில் சிக்கியிருக்கும் இந்நிறுவனத்துக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்த நிலுவையை, அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து செலுத்தத் துவங்கினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருப்பி செலுத்தும் காலம் 2031-- 32ல் துவங்கி, 2040--41ல் முடியும். இதில் அரசு தெரிவித்துள்ள கால வரிசைப்படி, உரிய தொகையைச் செலுத்தி கணக்கை முடித்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், கடந்த 2020 செப்டம்பரில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, 2017--18 மற்றும் 2018--19 ஆகிய நிதியாண்டுகளுக்கான கட்டண நிலுவைகளை எவ்வித மாற்றமும் இன்றி, 2025--26 முதல் 2030--31 வரை வோடபோன் ஐடியா செலுத்தியாக வேண்டும். இதற்குப் பிந்தைய நிதியாண்டுகளுக்கே சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோன் நிறுவனத்தில் அரசுக்கு 49 சதவீதப் பங்குகள் உள்ளன. மேலும், புதிய சலுகைகள் வாயிலாக அரசுக்கு வரவேண்டிய வருவாயும் கிடைக்கும், வோடபோனின் 20 கோடி வாடிக்கையாளர்களின் நலனும் பாதுகாக்கப்படும் என்ற கோணத்திலேயே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.