/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரூ.79,000 கோடி தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல்
/
ரூ.79,000 கோடி தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல்
ரூ.79,000 கோடி தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல்
ரூ.79,000 கோடி தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல்
ADDED : டிச 30, 2025 01:18 AM

புதுடில்லி: முப்படைகளின் போர்த்திறனை அதிகரிக்கும் வகையில், 79,000 கோடி ரூபாய் மதிப்பிலான தளவாட கொள்முதலுக்கு, ராணுவ கொள்முதல் கவுன்சிலான டி.ஏ.சி., ஒப்புதல் அளித்திருக்கிறது.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டி.ஏ.சி.,யின் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அதில், முன்வைக்கப்பட்ட தளவாட கொள்முதலுக்கான இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி, இந்திய ராணுவத்துக்கு ஆர்டிலரி ரெஜிமென்ட்ஸ், லைட்வெயிட் ரேடார், நீண்ட துார ராக்கெட் ஏவுதலுக்கான சிஸ்டம், ஒருங்கிணைந்த ட்ரோன் கண்டறிதல் மற்றும் இடை மறித் தல் சிஸ்டம் உட்பட பல தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும்.
விமானப்படைக்கு, அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்ற தானியங்கி டேக்ஆப் - லேண்டிங் ரெக்கார்டிங் சிஸ்டம் கொள்முதல் செய்யப்படும்.