/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சிறுசேரி 'சிப்காட்' பூங்காவில் நோக்கியா நிறுவனத்துக்கு நிலம்
/
சிறுசேரி 'சிப்காட்' பூங்காவில் நோக்கியா நிறுவனத்துக்கு நிலம்
சிறுசேரி 'சிப்காட்' பூங்காவில் நோக்கியா நிறுவனத்துக்கு நிலம்
சிறுசேரி 'சிப்காட்' பூங்காவில் நோக்கியா நிறுவனத்துக்கு நிலம்
ADDED : மார் 13, 2025 01:00 AM

சென்னை:தொலைதொடர்பு துறையில் ஈடுபட்டு வரும் நோக்கியா சொல்யூஷன்ஸ் நிறுவனம், 400 கோடி ரூபாய் முதலீட்டில், செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில், மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை மையம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்க உள்ளது.
இதற்காக, சிறுசேரியில் உள்ள, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தொழில் பூங்காவில், 3.14 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நோக்கியா ஆராய்ச்சி மையத்தால், 100க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு இறுதியில் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் போது, நோக்கியா மற்றும் தமிழக அரசு இடையில் கையெழுத்தானது.