தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ புதிய பங்கு வெளியீடு வாபஸ் வாங்கிய 'ஓயோ'

புதிய பங்கு வெளியீடு வாபஸ் வாங்கிய 'ஓயோ'

புதிய பங்கு வெளியீடு வாபஸ் வாங்கிய 'ஓயோ'


ADDED : மே 19, 2024 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2024 02:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:'ஓயோ' நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக நிதி திரட்டுவதற்கு, செபியிடம் சமர்ப்பித்த ஆவணங்களை தற்போது திரும்ப பெற்றுள்ளது.

ஹோட்டல் மற்றும் ரூம் புக்கிங் சேவைகளை வழங்கும் ஓயோ, புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 8,430 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டிருந்தது.

இதற்கான முதற்கட்ட ஆவணங்களை, பங்கு சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபியிடம், கடந்த 2021 செப்டம்பரில் சமர்ப்பித்தது.

ஆனால், தற்போது இந்த ஆவணங்களை ஓயோ திரும்பப் பெற்றுள்ளது. அமெரிக்க டாலர் பத்திரங்களின் விற்பனை வாயிலாக, 3,735 கோடி ரூபாய் மறுசீரமைப்பு நிதி திரட்ட, ஓயோ திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய நிதியை திரட்டுவதற்கான பணிகள் முடிக்கப்பட்ட பின், செபியிடம் புதிய வரைவு அறிக்கை ஒன்றை ஓயோ சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

'ஜே.பி. மோர்கன்' நிறுவனம் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைக்கான முதன்மை வங்கியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us