/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பேடிஎம் டிக்கெட் விற்பனை: 'சொமாட்டோ' வாங்குகிறது
/
பேடிஎம் டிக்கெட் விற்பனை: 'சொமாட்டோ' வாங்குகிறது
ADDED : ஆக 23, 2024 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:உணவு டெலிவரி வணிகத்தில் ஈடுபட்டு வரும் சொமாட்டோ, 'பேடிஎம்' நிறுவனத்தின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனை வணிகத்தை 2,048 கோடி ரூபாய்க்கு வாங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது இந்த வணிகத்தின் கீழ் திரைப்படம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனை மேற்கொள்ளப்ப்ட்டு வருகிறது.
முற்றிலும் ரொக்க முறையில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த ஒப்பந்தத்துக்கு, இரு நிறுவனங்களின் இயக்குனர் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

