/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஆர்.வி.என்.எல்., பங்கு விலை 6% உயர்வு
/
ஆர்.வி.என்.எல்., பங்கு விலை 6% உயர்வு
ADDED : மார் 26, 2024 10:03 PM

புதுடில்லி:ஏ.ஏ.ஐ., எனும் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதை அடுத்து, ஆர்.வி.என்.எல்., நிறுவனத்தின் பங்கு விலை, நேற்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில், ஆறு சதவீதத்துக்கு உயர்ந்தது.
ஆர்.வி.என்.எல்., எனும் 'ரயில்வே விகாஸ் நிகம் லிமிடெட்' இந்திய ரயில்வேயின் கட்டுமான பிரிவு நிறுவனமாகும். இந்நிறுவனம், ரயில் போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களின் அமலாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் இந்நிறுவனம், இந்திய விமான நிலைய ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, கோல்கட்டாவில் உள்ள ஏ.ஏ.ஐ., குடியிருப்பு காலனியுடன் இணைக்கும் வகையில், 229 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு சுரங்கப்பாதை ஒன்றை நிறுவனம் அமைக்க உள்ளது.
இதையடுத்து, இந்நிறுவனத்தின் பங்கு விலை நேற்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தக நேரத்தில், ஆறு சதவீதத்துக்கு உயர்ந்தது.
கடந்த ஆறு மாதங்களில், இந்நிறுவனத்தின் பங்கு விலை, 58 சதவீதம் உயர்ந்துள்ளது. இம்மாதத்தில் மட்டும் 45 சதவீதம் உயர்ந்துள்ளது.

