/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
செயற்கைக்கோள் உதவியுடன் விவசாயிகளுக்கு தரவு தளம்
/
செயற்கைக்கோள் உதவியுடன் விவசாயிகளுக்கு தரவு தளம்
ADDED : ஆக 16, 2024 11:21 PM

புதுடில்லி:காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் வகையில், செயற்கைக்கோள் தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய தரவு தளத்தை, மத்திய அரசு துவங்கி உள்ளது.
'கிரிஷி - டி.எஸ்.எஸ்.,' எனப்படும், இந்த புதிய தளத்தில், பயிர்களின் பல்வேறு வளர்ச்சி நிலை, வானிலை நிலவரம், நீர் இருப்பு, மண்வளம் போன்றவற்றை விவசாயிகள் அறிந்து கொள்ள லாம். விண்வெளித் துறையின் 'ரிசாட் 1ஏ, வேதாஸ்' ஆகியவற்றை பயன்படுத்தி, கிரிஷி டி.எஸ்.எஸ்., தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மோசமான வானிலை, பேரிடர் மற்றும் பூச்சித் தாக்குதல் போன்றவற்றை, செயற்கைக்கோள் உதவியுடன், முன்னரே கணித்து, இந்த தளம் எச்சரிக்கை விடுக்கும்.
இதனடிப்படையில், பயிர்களின் சேதத்தை தவிர்க்க, விவசாயிகள் சரியான நேரத்தில் முடிவு எடுத்துக்கொள்ளலாம். காலநிலை மாற்றம் தொடர்பான சவால்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்த தளம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

