/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சாட்டிலைட் அலைக்கற்றை உரிமம்: டிராய் ஆலோசனை
/
சாட்டிலைட் அலைக்கற்றை உரிமம்: டிராய் ஆலோசனை
ADDED : மார் 13, 2025 11:35 PM

புதுடில்லி, மார்ச் 14-
செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடுக்கான உரிமத்தை, ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்க மத்திய அரசுக்கு, டிராய் பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்க வலியுறுத்தி வரும் நிலையில், டிராய் இவ்வாறு ஆலோசிப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு விலை, உரிமத்துக்கான காலவரையறை உள்ளிட்டவை குறித்து, மத்திய அரசுக்கு விரைவில் டிராய் பரிந்துரைகளை வழங்க உள்ளது.
இந்தியாவில் குறைந்த விலையில் இணைய சேவை வழங்குவது மற்றும் நீண்ட கால முதலீடு மேற்கொள்வதற்கு ஏதுவாக, செயற்கைக்கோள் அலைக்கற்றைக்கு 20 ஆண்டுகள் வரை உரிமம் வழங்க, ஸ்டார்லிங்க் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.
அதே நேரத்தில், ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை உரிமம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
அதன் பின், துறையின் வளர்ச்சியைப் பொறுத்து மாற்றங்கள் கொண்டு வரலாம் என, தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன.
ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே உரிமம் வழங்குவது குறித்து டிராய் ஆலோசனை