/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'மன்பசந்த்' நிறுவனத்துக்கு செபி 3 ஆண்டுகள் தடை
/
'மன்பசந்த்' நிறுவனத்துக்கு செபி 3 ஆண்டுகள் தடை
ADDED : மே 02, 2024 12:51 AM

புதுடில்லி:'மன்பசந்த் பிவரேஜஸ்' நிறுவனம் மற்றும் அதன் மூன்று உயர் அதிகாரிகள், பங்குச் சந்தை பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கு, மூன்று ஆண்டுகளுக்கு தடை விதித்து 'செபி' உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவை தலைமையிடமாகக் கொண்டு, பானங்கள் தயாரிக்கும் மன்பசந்த் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், கடந்த 2018 - 19 மற்றும் 2019 - 20ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலில், தவறான தகவல்களை பங்குச் சந்தையில் தாக்கல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து, செபி விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து, மன்பசந்த் நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான திரேந்திர சிங், மற்றொரு நிர்வாக இயக்குனரான அபிஷேக் சிங் மற்றும் தலைமை நிதி அதிகாரியான பரேஷ் தக்கார் ஆகியோர் பங்குச் சந்தை செயல்பாடுகளில் ஈடுபட மூன்று ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலா 17 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 68 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

