தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ இணைய பிரபலங்களுக்கு செபி புதிய கட்டுப்பாடு

இணைய பிரபலங்களுக்கு செபி புதிய கட்டுப்பாடு

இணைய பிரபலங்களுக்கு செபி புதிய கட்டுப்பாடு


ADDED : செப் 02, 2024 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2024 12:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இணையத்தில் நிதி ஆலோசனைகளை வழங்கி வரும் செல்வாக்காளர்கள் என அழைக்கப்படுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில், 'செபி' புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

இணையத்தில் பலரும் பலவித உள்ளடக்கத்தை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். இவர்களில் ஒரு சிலர் மிகவும் பிரபலமாக உள்ளனர். இவர்களுக்கு பயனாளிகள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ளது. இவர்கள் செல்வாக்காளர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

இதே போல நிதித்துறை, முதலீடு தொடர்பான உள்ளடக்கத்தை உருவாக்கி பிரபலமானவர்கள் நிதி செல்வாக்காளர்கள் என குறிப்பிடப்படுகின்றனர். செபியிடம் முறையாக பதிவு செய்யாத இந்த பிரிவினர், முதலீடு, பங்கு வர்த்தகம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவது விவாதத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நிதி செல்வாக்காளர்களை கட்டுப்படுத்தும் வகையில், செபி புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ள சுற்றறிக்கையில், செபியிடம் பதிவு செய்து கொண்டவர்கள், அவர்கள் கீழ் செயல்படுபவர்கள், பதிவு செய்து கொள்ளாமல், முதலீடு ஆலோசனை செய்பவர்களுடன் எந்த தொடர்பும்வைத்துக்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விழிப்புணர்வு நோக்கில் செயல்படலாம் என்றும், அப்போது நிதி செல்வாக்காளர்கள் எந்த வித நிதி பரிந்துரையையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் செபி தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us