/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'பாக்ஸ்கான்' ஆலைக்கு நிலம் வழங்க போட்டி போடும் தென் மாநிலங்கள்
/
'பாக்ஸ்கான்' ஆலைக்கு நிலம் வழங்க போட்டி போடும் தென் மாநிலங்கள்
'பாக்ஸ்கான்' ஆலைக்கு நிலம் வழங்க போட்டி போடும் தென் மாநிலங்கள்
'பாக்ஸ்கான்' ஆலைக்கு நிலம் வழங்க போட்டி போடும் தென் மாநிலங்கள்
ADDED : ஆக 29, 2024 01:02 AM

புதுடில்லி:'பாக்ஸ்கான்' நிறுவனம், அதன் புதிய உற்பத்தி மையத்தை 'பாக்ஸ்கான் நகரம்' ஆக அமைப்பதற்கு நிலம் வழங்க, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் போட்டி போடுகின்றன.
'ஆப்பிள்' நிறுவனத்தின் 'ஐபோன்' தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பாக்ஸ்கான், இந்தியாவில் தன் ஆலை விரிவாக்கத்துக்காக தென் மாநிலங்களில் இடத்தை தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளது.
இந்நிலையில், இதற்கான இடத்தை வழங்க தயாராக உள்ளதாக தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளன.
மாநிலங்கள் தாராளம்
தெலுங்கானா மாநில அரசு 2,000 ஏக்கர் நிலம் வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த இடத்தில் சீனாவின் செங்சூ நகரில் அமைத்துள்ளது போல, பாக்ஸ்கான் நகரத்தை அமைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதேபோல் ஆந்திராவும் 2,500 ஏக்கர் நிலத்தை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலமும், பாக்ஸ்கான் ஆலைக்கு அருகே விற்பனையாளர்களுக்காக, வினியோக பூங்கா அமைக்க ஏதுவாக, 300 ஏக்கர் நிலம் வழங்க முன்வந்துள்ளது.
சீனாவிலிருந்து செயல்படுவதில் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, பாக்ஸ்கான் அதன் தயாரிப்பு ஆலைகளை பிற இடங்களில் விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
விரிவுபடுத்த திட்டம்
இதன் ஒரு பகுதியாகவே, தற்போது இந்தியாவில் தன் தயாரிப்பு ஆலைகளை விரிவுபடுத்த திட்டமிட்டு வருகிறது.
ஏற்கனவே தமிழகம் மற்றும் ஆந்திராவில் இயங்கி வரும் இந்நிறுவனம், ஐபோன் தயாரிப்புக்காக பிரத்யேகமாக கர்நாடகாவில் தற்போது ஒரு ஆலையை அமைத்து வருகிறது.

