நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச் சந்தை கடந்த வாரம் இறுதியில் ஆரம்ப ஆதாயத்தை இழந்து முடிந்தது. இரண்டு நாள் ஏறுமுகத்திற்கு பின், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 8 புள்ளிகள் குறைந்து, 74,333 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 8 புள்ளிகள் உயர்ந்து, 22,553 புள்ளிகளாக இருந்தது.
அமெரிக்க வரி விதிப்பு போக்கால் எழுந்துள்ள வர்த்தக போர் அச்சத்தால், சர்வதேச சந்தையில் நிச்சயமற்ற போக்கு நிலவுவது தாக்கம் செலுத்தியது. இதனிடையே, வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.
-
ஏறுமுகம் கண்ட பங்குகள்
1. ரிலையன்ஸ்- 1,249.10 (3.18)
2. நெஸ்லே -2,237.30 (1.62)
3. டாடா மோட்டார்ஸ்- 648.45 (1.36)
-
இறங்குமுகம் கண்ட பங்குகள்
1. சொமேட்டோ- 216.80 (3.82)
2. இண்டஸ் இண்ட் பாங்க்- 936.80 (3.53)
3. என்.டி.பி.சி.,- 329.35 (2.49)