சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம் / பங்கு சந்தை நிலவரம்
/
செய்திகள்
பங்கு வர்த்தகம்
பங்கு சந்தை நிலவரம்
ADDED : ஏப் 03, 2024 11:22 PM
முதலீட்டாளர்கள் லாபத்தை அறுவடை செய்யும் எண்ணத்தில் இருந்ததை அடுத்து, நேற்றும் சந்தை சரிவைக் கண்டது. குறிப்பிட்ட சில வங்கி பங்குகள், வாகன பங்குகளில் முதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தை வெளியே எடுக்கக் கருதியது, உலக சந்தைகள் பல இறக்கத்தைக் கண்டது, அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை அதிகம் வெளியே எடுத்தது போன்ற காரணங்களால், சென்செக்ஸ், நிப்டி குறியீடுகள் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் குறியீடு 0.04 சதவீதமும்; நிப்டி குறியீடு 0.08 சதவீதமும் சரிவைக் கண்டன. வர்த்தகம் துவங்கியதிலிருந்தே நிப்டி ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து, வர்த்தக இறுதியில் இறக்கத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் குறியீட்டில் இருக்கும் 30 பங்குகளில் 16 பங்குகள் சரிவைக் கண்டன அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கியின் தலைவர் உரையை எதிர்பார்த்திருந்த காரணத்தால், முதலீட்டாளர்கள் ஜாக்கிரதை உணர்வுடனேயே சந்தையை அணுகினர் ரிசர்வ் வங்கியின் மூன்று நாட்கள் பண கொள்கைக்குழு கூட்டம் துவங்கியது. நாளை வட்டிவிகிதம் குறித்து அறிவிக்கப்படும் என்பதாலும், முதலீடுகள் கவனமாக மேற்கொள்ளப்பட்டன அன்னிய முதலீட்டாளர்கள், செவ்வாயன்று மட்டும் கிட்டத்தட்ட 1,623 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ள தரவு வெளியானது உலகளவிலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.31 அதிகரித்து, ஒரு பேரல் 88.20 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமானது அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா குறைந்து, 83.45 ரூபாயாக இருந்தது