ADDED : ஏப் 11, 2024 12:59 AM

நிப்டி
முந்தைய முடிவு : 22,642.75நேற்றைய முடிவு: 22,753.80மாற்றம்: 111.05 ஏற்றம் பச்சை
சென்செக்ஸ்
முந்தைய முடிவு: 74,683.70நேற்றைய முடிவு: 75,038.15மாற்றம்: 354.45 ஏற்றம் பச்சை
நிறுவனங்கள் நிலை
(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 50%இறக்கம் கண்டவை : 47%மாற்றம் காணாதவை:3%
தொடரும் புதிய உச்சங்கள்
சென்செக்ஸ் குறியீடு, அதன் வரலாற்றில் முதன்முறையாக, நேற்று 75,000 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து முடிவடைந்தது. இதேபோல், நிப்டியும், வரலாற்று உயர்வுடன் முடிவடைந்தது.
நேற்று முன்தினம் வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 75,000 புள்ளிகளைத் தொட்டு, பிறகு இறங்கியது. நேற்று முதன்முறையாக, வர்த்தக இறுதியில் 75000 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து முடிவடைந்தது.
நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 0.47 சதவீதமும்; நிப்டி 0.49 சதவீதமும் உயர்வைக் கண்டன. நுகர்பொருட்கள், எரிசக்தி, உலோகம் ஆகிய துறைகளை சார்ந்த பங்குகள் விலை உயர்ந்ததை அடுத்து, சென்செக்ஸ், நிப்டி ஆகியவை உயர்ந்தன.
பெரும்பாலான துறையைச் சேர்ந்த பங்குகள் விலை உயர்வைக் கண்டபோதிலும், மருந்து துறை சார்ந்த பங்குகள் வீழ்ச்சியைக் கண்டன ஆசிய சந்தைகளில் டோக்கியோ, ஷாங்காய் ஆகியவை சரிவிலும்; ஹாங்காங் உயர்வுடனும் முடிவுற்றன. தென்கொரியாவில் தேர்தலை முன்னிட்டு சந்தைகளுக்கு விடுமுறை. ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகமாகி வந்தன
உலகளவிலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 0.18 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 89.58 அமெரிக்க டாலராக இருந்தது
இந்திய பங்கு சந்தைகளில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், செவ்வாயன்று 593 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்பனை செய்திருந்தனர்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 பைசா அதிகரித்து, 83.19 ரூபாயாக இருந்தது.
ஏற்றம் கண்ட பங்குகள்
கோல் இந்தியா பி.பி.சி.எல்., கோட்டக் மஹிந்திரா ஐ.டி.சி., ஹிண்டால்கோ
இறக்கம் கண்ட பங்குகள்
எச்.டி.எப்.சி., லைப் சிப்லா டிவிஸ் லேப்ஸ் மாருதி சுசூகி ஸ்ரீராம் பைனான்ஸ்
