ADDED : ஏப் 23, 2024 10:12 PM

நிப்டி
முந்தைய முடிவு : 22,336.40
நேற்றைய முடிவு: 22,368.00
மாற்றம்: 31.60 ஏற்றம் பச்சை
சென்செக்ஸ்
முந்தைய முடிவு: 73,648.62
நேற்றைய முடிவு: 73,738.45
மாற்றம்: 89.83 ஏற்றம் பச்சை
ஏற்றம் கண்ட பங்குகள்
கிராஸிம்
பார்தி ஏர்டெல்
நெஸ்ட்லே
மாருதி சுசூகி
எச்.சி.எல்.,டெக்
இறக்கம் கண்ட பங்குகள்
சன் பார்மா
பி.பி.சி.எல்.,
ரிலையன்ஸ்
மஹிந்திரா அண்டு மஹிந்திரா
ஹிண்டால்கோ
ஏற்றத்தை தடுத்த ரிலையன்ஸ்
*தொடர்ந்து மூன்றாவது வர்த்தக நாளாக, நேற்றும் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது.
*வர்த்தகத்தின் இடையே, கிட்டத்தட்ட 400 புள்ளிகள் வரை அதிகரித்த சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதியில் 0.55 சதவீதம் உயர்வுடன், 89.83 புள்ளிகள் அதிகரித்து நிறைவுற்றது
* நிப்டி வர்த்தகத்தின் இடையே 111 புள்ளிகள் உயர்ந்து, அதன் பின் வர்த்தகத்தின் இறுதியில் 0.14 சதவீதம் உயர்ந்து, முடிவடைந்தது
தொலைதொடர்பு, தொழில்நுட்பம், நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளை சார்ந்த பங்குகள் விலை அதிகரித்தது, சந்தையின் உயர்வுக்கு வழிவகுத்தது
* இருப்பினும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் லாபத்தை அறுவடை செய்யும் நோக்குடன் அதிகளவில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டது, சந்தையின் துவக்கத்தில் இருந்த அதிக ஏற்றத்தை கீழே இறக்கியது
* ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் விலை ஒரு சதவீதத்துக்கும் அதிகமாக சரிவு கண்டு, 2,919 ரூபாயாக குறைந்தது
* ஆசிய சந்தைகளில் டோக்கியோ, ஹாங்காங் ஆகியவை ஏற்றத்துடனும், சியோல், ஷாங்காய் ஆகியவை இறக்கத்துடனும் முடிவடைந்தன
* உலகளவிலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 0.41 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 87.36 அமெரிக்க டாலராக இருந்தது
* இந்திய பங்கு சந்தைகளில், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், திங்களன்று 2,915 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்பனை செய்திருந்தனர்
* அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, மூன்று பைசா அதிகரித்து 83.33 ரூபாயாக இருந்தது.
நிறுவனங்கள் நிலை
(மும்பை பங்கு சந்தை)
ஏற்றம் கண்டவை : 60%
இறக்கம் கண்டவை : 37%
மாற்றம் காணாதவை: 3%
