தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : ஏப் 24, 2024 12:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2024 12:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி

முந்தைய முடிவு : 22,336.40நேற்றைய முடிவு: 22,368.00மாற்றம்: 31.60 ஏற்றம் பச்சை



சென்செக்ஸ்

முந்தைய முடிவு: 73,648.62நேற்றைய முடிவு: 73,738.45மாற்றம்: 89.83 ஏற்றம் பச்சை



நிறுவனங்கள் நிலை

(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 60%இறக்கம் கண்டவை : 37%மாற்றம் காணாதவை: 3%



ஏற்றத்தை தடுத்த ரிலையன்ஸ்


 தொடர்ந்து மூன்றாவது வர்த்தக நாளாக, நேற்றும் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது.
 வர்த்தகத்தின் இடையே, கிட்டத்தட்ட 400 புள்ளிகள் வரை அதிகரித்த சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதியில் 0.55 சதவீதம் உயர்வுடன், 89.83 புள்ளிகள் அதிகரித்து நிறைவுற்றது
 நிப்டி வர்த்தகத்தின் இடையே 111 புள்ளிகள் உயர்ந்து, அதன்பின் வர்த்தகத்தின் இறுதியில் 0.14 சதவீதம் உயர்ந்து, முடிவடைந்தது
 தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம், நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளை சார்ந்த பங்குகள் விலை அதிகரித்தது, சந்தையின் உயர்வுக்கு வழிவகுத்தது
 இருப்பினும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் லாபத்தை அறுவடை செய்யும் நோக்குடன் அதிகளவில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டது, சந்தையின் துவக்கத்தில் இருந்த அதிக ஏற்றத்தை கீழே இறக்கியது
 ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் விலை ஒரு சதவீதத்துக்கும் அதிகமாக சரிவு கண்டு, 2,919 ரூபாயாக குறைந்தது
 'மஹிந்திரா பைனான்ஸ்' நிறுவனம், அதன் சில்லரை வாகன கடன் பிரிவில் 150 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து, நேற்று வர்த்தக நேரத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 5.47 சதவீதம் சரிந்து, 263.60 ரூபாய்க்கு வர்த்தகமானது.
 உலகளவிலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 0.41 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 87.36 அமெரிக்க டாலராக இருந்தது
 இந்திய பங்கு சந்தைகளில், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், திங்களன்று 2,915 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்பனை செய்திருந்தனர்
 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, மூன்று பைசா அதிகரித்து 83.33 ரூபாயாக இருந்தது.



ஏற்றம் கண்ட பங்குகள்


 கிராஸிம் பார்தி ஏர்டெல் நெஸ்ட்லே மாருதி சுசூகி எச்.சி.எல்., டெக்



இறக்கம் கண்ட பங்குகள்


 சன் பார்மா பி.பி.சி.எல்., ரிலையன்ஸ் மஹிந்திரா அண்டு மஹிந்திரா ஹிண்டால்கோ



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us