செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம் / பங்கு சந்தை நிலவரம்
/
செய்திகள்
பங்கு வர்த்தகம்
பங்கு சந்தை நிலவரம்
ADDED : ஏப் 26, 2024 11:38 PM
முந்தைய முடிவு : 22,570.35நேற்றைய முடிவு: 22,419.95மாற்றம்: 150.40 இறக்கம் சிவப்பு
முந்தைய முடிவு: 74,339.44நேற்றைய முடிவு: 73,730.16மாற்றம்: 609.28 ஏற்றம் பச்சை
(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 52% இறக்கம் கண்டவை : 45%மாற்றம் காணாதவை: 3%
 தொடர்ந்து ஐந்து நாட்களாக ஏற்றத்தில் சென்றுகொண்டிருந்த சந்தை, நேற்று சரிவைக் கண்டது லாபத்தை அறுவடை செய்யும் நோக்கில், அதிகளவில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டது, அதிகரிக்கும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை, சரிவு காணும் இந்திய ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து அதிகளவில் வெளியேறும் அன்னிய முதலீடு ஆகியவை காரணமாக, சந்தை நேற்று சரிவைக் கண்டதாக, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் சென்செக்ஸ் குறியீட்டில், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம், அதிக இறக்கத்தை சந்தித்தது. இந்நிறுவன பங்குகள் விலை 8 சதவீதம் அளவுக்கு சரிந்தது. மார்ச் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இல்லாமல் போனதால், சரிவு ஏற்பட்டது மாறாக, டெக் மஹிந்திரா நிறுவனம், அதன் எதிர்கால திட்டங்கள் குறித்து அறிவித்தது முதலீட்டாளர்களை அதிகம் ஈர்த்ததால், இந்நிறுவன பங்குகள் 7 சதவீதம் உயர்ந்தது 'டெலாய்ட் இந்தியா' நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.6 சதவீதமாக இருக்கும் என அறிவித்தது உற்சாகம் அளிப்பதாக இருந்தாலும், சந்தையில் பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தவில்லை மாருதி சுசூகி நிறுவனம், மார்ச் காலாண்டில், அதன் நிகர லாபம் 47.8 சதவீதம் அதிகரித்து, 3,879 கோடி ரூபாயாக இருந்தது என அறிவித்துள்ளது உலகளவிலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 0.31 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 89.29 அமெரிக்க டாலராக இருந்தது இந்திய பங்கு சந்தைகளில், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், வியாழனன்று 2,823 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்பனை செய்திருந்தனர் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா குறைந்து, 83.35 ரூபாயாக இருந்தது.
 டெக் மஹிந்திரா டிவிஸ் லேப்ஸ் எல்.டி.ஐ.,மைண்டுட்ரீ பஜாஜ் ஆட்டோ பி.பி.சி.எல்.,
 பஜாஜ் பைனான்ஸ் பஜாஜ் பின்சர்வ் இண்டஸ்இண்ட் பேங்க் நெஸ்ட்லே மஹிந்திரா அண்டு மஹிந்திரா