sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

பங்கு சந்தை நிலவரம்

/

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : மே 09, 2024 02:21 AM

Google News

ADDED : மே 09, 2024 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எந்த மாற்றமும் இல்லை


 நேற்றைய தினம், பங்கு சந்தைகள் அதிகமான ஏற்ற இறக்கத்துடன் இருந்து, இறுதியில் சரிவைக் கண்டன.
 நிப்டி, எந்த மாற்றமும் இல்லாமல், முந்தைய தின முடிவு எவ்வாறு இருந்ததோ, அதே புள்ளிகளுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 0.06 சதவீதம் சரிவுடன் நிறைவடைந்தது
 தனியார் வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டதும், அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததும், இறக்கத்துக்கு வழிவகுத்தது
 ஓட்டளித்தவர்கள் சதவீதம் குறைந்தது, ஆசிய சந்தைகளின் இறக்கம் ஆகியவை, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைப்பதாக அமைந்ததும், சந்தை சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது
 இவை போன்ற காரணங்களால், முதலீட்டாளர்கள் மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடனேயே சந்தையை அணுகி வருகின்றனர்
 உலக கச்சா எண்ணெய் சந்தையில், நேற்று ஒரு பேரலின் விலை 1.65 சதவீதம் சரிந்து, 81.79 டாலராக இருந்தது
 இந்திய பங்கு சந்தைகளில், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், செவ்வாயன்று 3,669 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்பனை செய்திருந்தனர்
 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, பெரிய மாற்றம் ஏதுவுமின்றி, 83.51 ரூபாயாக இருந்தது.



நிப்டி

முந்தைய முடிவு : 22,302.50நேற்றைய முடிவு: 22,302.50மாற்றம்: 0.00 மாற்றமில்லை



சென்செக்ஸ்


முந்தைய முடிவு: 73,511.85நேற்றைய முடிவு: 73,466.39மாற்றம்: 45.46 இறக்கம் சிவப்பு



ஏற்றம் கண்ட பங்குகள்


 ஹீரோ மோட்டோகார்ப் பி.பி.சி.எல்., டாடா மோட்டார்ஸ் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஹிண்டால்கோ



இறக்கம் கண்ட பங்குகள்


 டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் ஏசியன் பெயின்ட்ஸ் கிராஸிம் அல்ட்ராடெக் சிமென்ட் எச்.யு.எல்.,



நிறுவனங்கள் நிலை

(
மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 54% இறக்கம் கண்டவை : 42%மாற்றம் காணாதவை: 4%








      Dinamalar
      Follow us