டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
ADDED : மே 17, 2024 10:00 PM
நேற்று சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. ரிலையன்ஸ், மஹிந்திரா, ஐ.டி.சி., நிறுவன பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டது, சந்தையின் ஏற்றத்துக்கு துணை புரிந்தது நேற்றைய வர்த்தகத்தில், மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவன பங்குகள் அதிக லாபத்தை ஈட்டின. இந்நிறுவன பங்குகள் 5.97 சதவீதம் உயர்ந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 0.73 சதவீத உயர்வை கண்டது உள்நாட்டு முதலீட்டாளர்களும், சாதகமான காலாண்டு முடிவுகளும் சந்தையை உயர்வில் தக்க வைப்பதற்கு பெரிதும் உதவியுள்ளன மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள் விலை குறைந்திருந்ததை அடுத்து, அவற்றை வாங்கும் ஆர்வம், சந்தையை தாங்கிப் பிடித்து வந்துள்ளது ஆசிய சந்தைகளில் ஷாங்காய், ஹாங்காங் ஆகிய சந்தைகள் ஏற்றத்திலும், சியோல் மற்றும் நிக்கி ஆகியவை இறக்கத்திலும் முடிவு அடைந்தன அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வியாழனன்று மட்டும், 776 கோடி ரூபாய் முதலீட்டை வெளியே எடுத்துள்ளனர் உலக கச்சா எண்ணெய் சந்தையில் நேற்று, 1 பேரலின் விலை 0.25 சதவீதம் அதிகரித்து, 83.48 டாலராக இருந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 பைசா அதிகரித்து, 83.33 ரூபாயாக இருந்தது.
முந்தைய முடிவு: 22,403.85நேற்றைய முடிவு: 22,466.10மாற்றம்: 62.25 ஏற்றம் பச்சை
முந்தைய முடிவு: 72,663.72நேற்றைய முடிவு: 73,917.03மாற்றம்: 253.31 ஏற்றம் பச்சை
(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை: 60% இறக்கம் கண்டவை: 35%மாற்றம் காணாதவை: 5%
மஹிந்திரா அண்டு மஹிந்திரா ஜெ.எஸ்.டபுள்யு., ஸ்டீல் கிராசிம் அல்ட்ராடெக் சிமென்ட் பி.பி.சி.எல்.,
டி.சி.எஸ்., சிப்லா எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் எச்.சி.எல்., டெக் பஜாஜ் ஆட்டோ