ADDED : பிப் 25, 2025 11:03 PM

கலவையுடன் முடிந்த சந்தை
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று நிப்டி லேசான இறக்கம்; சென்செக்ஸ் சிறிய ஏற்றம் என கலவையுடன் நிறைவு செய்தன. அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் நீடித்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டியதால், நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கியது. பிற்பகல் வரை சந்தை குறியீடுகள் உயர்வுடன் வர்த்தகமாகின.
இதன்இடையே, அமெரிக்கா -- சீனா இடையே வர்த்தக மோதல், முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கடைசி நேரத்தில் நிப்டி சரிவைக் கண்டது. இருப்பினும், தொடர்ச்சியாக, கடந்த ஐந்து நாட்களாக கண்ட சரிவுக்கு, சென்செக்ஸ் நேற்று முற்றுப்புள்ளி வைத்தது. மஹா சிவராத்திரியை ஒட்டி இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 3,529 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.13 சதவீதம் குறைந்து, 74.68 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 பைசா சரிந்து, 87.19 ரூபாயாக இருந்தது.

