வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / வர்த்தக துளிகள் / வர்த்தக துளிகள்
/
செய்திகள்
பங்கு வர்த்தகம்
வர்த்தக துளிகள்
ADDED : மார் 10, 2025 11:01 PM
ஒப்புதல் கேட்டது மத்திய அரசுஇந்த மாதத்துடன் முடியவுள்ள நடப்பு நிதியாண்டில், 51,463 கோடி ரூபாயை கூடுதலாக செலவிடுவதற்கு, பார்லி.,யில் மத்திய அரசு நேற்று ஒப்புதல் கோரியது. அரசின் மொத்த கூடுதல் செலவினம் 2024--25ம் நிதியாண்டில், 6.78 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், 6.27 லட்சம் கோடி சேமிப்பு மற்றும் வருவாய் வாயிலாக சரிசெய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று லோக்சபாவில், அரசின் நிகர கூடுதல் செலவான 51,463 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் தரக்கோரி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுமதி கோரினார். கூடுதல் செலவினங்களில், 12,000 கோடி ரூபாய் உர மானியத்துக்கும், 13,449 கோடி ரூபாய் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்துக்கும் செலவிடப்படும்.
பாக்ஸ்கான் நிறுவனம் அறிமுகம்தைவானைச் சேர்ந்த ஐபோன் ஒப்பந்த தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான், என்விடியாவின் 120 எச்100 ஜி.பி.யு.,வை பயன்படுத்தி 'பாக்ஸ்பிரைன்' எனப்படும் தன் முதல் பெரிய லாங்குவேஜ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் டீப்சீக் மாடலோடு ஒப்பிடுகையில் செயல்திறன் குறைந்து இருந்தாலும், ஒட்டுமொத்த செயல்திறன் உலக தரத்துக்கு இணையாக இருக்கும் எனவும்; முதற்கட்டமாக, எல்.எல்.எம்., மாடல், தரவு பகுப்பாய்வு, முடிவெடுத்தல், ஆவணங்கள் ஒன்றிணைத்தல், குறியீடு உருவாக்கம் ஆகியவற்றில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், இதனை பயன்படுத்தி, தயாரிப்பு மற்றும் வினியோக தொடரை மேம்படுத்த இருப்பதாகவும் பாக்ஸ்கான் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு மூன்றாமிடம்சிப் வடிவமைப்பு தொடர்பான அதிக எண்ணிக்கையிலான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்த நாடுகளில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்து இருப்பதாக, அமெரிக்காவின் ஜார்ஜ் டவுன் பல்கலையின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப ஆய்வகம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 முதல் 2023ம் ஆண்டு வரை, உலகம் முழுதும் சிப் வடிவமைப்பு தொடர்பாக 4.73 லட்சம் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இதில், இந்திய பல்கலைக்கழகங்கள் 39,709 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து உள்ளன. ஐந்து ஆண்டுகளில், நம் நாட்டின் பங்களிப்பு 26 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம், சிப் வடிவமைப்பு தொடர்பான ஆய்வு கட்டுரைகளில், அமெரிக்காவை விஞ்சி, 1.61 லட்சம் ஆய்வு கட்டுரைகளுடன் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.