ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / வர்த்தக துளிகள் / வர்த்தக துளிகள்
/
செய்திகள்
பங்கு வர்த்தகம்
வர்த்தக துளிகள்
ADDED : மார் 12, 2025 12:54 AM
இந்தியாவில் இருந்து ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் ஒரு சிலவற்றில் மட்டுமே, 'அப்லாடாக்சின்' எனப்படும் பூசண நச்சு வகை கண்டறியப்பட்டதாக, வர்த்தகத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா லோக்சபாவில் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது: அரிசியில் அப்லாடாக்சின் பி1 அதிகபட்ச எச்சத்தின் அளவு, சமீபகாலமாக ஐரோப்பிய யூனியனால் மாற்றியமைக்கப்படவில்லை. இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியில், இவை கண்டறியப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
'ஐ.ஐ.எப்.எல்., கேப்பிடல் சர்வீசஸ்' நிறுவனம், தன் வணிக வங்கி பிரிவு கடன் பிரச்னையை உரிய கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என, சந்தை கட்டுப்பாட்டாளரான செபி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.ஐ.எப்.எல்., கேப்பிடல், பங்கு சந்தையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2022 ஏப்ரல் 1 முதல், 2024 ஏப்., 30 வரையிலான காலத்தில், நிறுவனத்தின் வணிக வங்கி கையாண்ட கடன் தொடர்பான பிரச்னை குறித்து, செபி விசாரணை மேற்கொண்டது. அதில் தனிப்பட்ட செலவினங்கள் மற்றும் இடைத்தரகருக்கு கட்டணம் செலுத்தியது தொடர்பான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என தெரிவித்து இருந்தது. இதற்கு, நிறுவனம் சார்பில் விளக்கம் அளித்தத்தை தொடர்ந்து, மார்ச் 7ம் தேதி, நிர்வாக ரீதியாக செபி எச்சரிக்கை விடுத்தது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்தக்கட்ட சுற்றுச்சூழல் அனுமதிகேரளாவில், திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞத்தில் அதானி குழுமம் அமைத்து வரும் பிரமாண்ட துறைமுகத்துக்கான அடுத்தக்கட்ட பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்துள்ளதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த ஒப்புதலானது, துறைமுகம் அமைக்கும் இரண்டாவது, மூன்றாவது கட்ட பணிகளை, திட்டமிடப்பட்ட 2028ம் ஆண்டுக்கு முன்னதாக முடிக்க உதவும் என, விஜயன் தெரிவித்துள்ளார்.
4% வரை உயர்வு: சி.பி.ஆர்.இ.,உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பால், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், கடந்த 2024ல் கட்டுமான செலவுகள், 2 முதல் 4 சதவீதம் வரை அதிகரித்ததாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சி.பி.ஆர்.இ., தெரிவித்துள்ளது. மேலும், தன் அறிக்கையில், கடந்த 2024ல் சிமென்ட், ஸ்டீல் மற்றும் அலுமினிய செலவு கணிசமாக குறைந்த போதிலும், மரம் மற்றும் கற்களுக்கான செலவு அதிகரித்தது. தொழிலாளர் செலவு 5 சதவீதம் வரை அதிகரித்தது ஆகியவை, கட்டுமான செலவு அதிகரிக்க காரணம் என தெரிவித்துள்ளது.