ADDED : ஆக 30, 2024 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'டாடா - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' கூட்டு நிறுவனமான 'விஸ்தாரா' விமான நிறுவனம், வருகிற நவம்பர் 12ம் தேதி முதல் ஏர் இந்தியாவுடன் இணைகிறது.
'டாடா - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' இணைந்து துவங்கிய 'விஸ்தாரா' நிறுவனம், ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று கடந்த 2022 நவம்பரில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஏர் இந்தியாவில், விஸ்தாரா இணைந்ததும், அதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்சின் பங்கு 25.10 சதவீதமாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அன்னிய நேரடி முதலீடுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, நவம்பர் 11ஆம் தேதியுடன் விஸ்தாரா விமான சேவை முடிவுக்கு வருகிறது.