/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'தாய்கோ' கடனுதவி திட்டம் 100 நிறுவனங்கள் விண்ணப்பம்
/
'தாய்கோ' கடனுதவி திட்டம் 100 நிறுவனங்கள் விண்ணப்பம்
'தாய்கோ' கடனுதவி திட்டம் 100 நிறுவனங்கள் விண்ணப்பம்
'தாய்கோ' கடனுதவி திட்டம் 100 நிறுவனங்கள் விண்ணப்பம்
ADDED : நவ 03, 2024 02:30 AM

சென்னை:'தாய்கோ' வங்கியில் குறுந்தொழில்களுக்கு, 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும், 'கலைஞர் கடனுதவி திட்டம்' துவக்கப்பட்டு, ஒரு மாத காலத்தில், 100 பேர் கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.
இத்திட்டம் குறித்து தொழில்முனைவோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின், 'தாய்கோ' எனப்படும் தமிழக தொழிற்கூட்டுறவு வங்கி, மாநிலம் முழுதும், 48 கிளைகளுடன் செயல்படுகிறது.
இது, தொழிற்கூட்டுறவு சங்கங்கள், தனிநபர், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குகிறது.
குறுந்தொழில் நிறுவனங்கள், விரிவாக்க நடவடிக்கைக்கான மூலதன செலவை சமாளிப்பதில் சிரமப்படுகின்றன.
எனவே, அந்நிறுவனங்களுக்கு, 7 சதவீத வட்டியில், 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் கலைஞர் கடனுதவி திட்டம், கடந்த செப்டம்பர் இறுதியில் துவக்கப்பட்டது.
இதற்காக நடப்பு நிதியாண்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில், புதிய திட்டத்தின் கீழ் கடன் கேட்டு, 100 குறுந்தொழில் நிறுவனங்கள் தாய்கோ வங்கியிடம் விண்ணப்பம் செய்துள்ளன.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடன் கேட்டிருப்பதில், பெரும்பாலான நிறுவனங்கள், நடைமுறை மூலதன செலவை சமாளிக்க கடன் கேட்டுள்ளன. அவற்றில் விண்ணப்பம் பரிசீலனை முடிந்த ஐந்து நிறுவனங்களுக்கு விரைவில் கடன் வழங்கப்பட உள்ளது. மற்ற வற்றுக்கு பரிசீலனைக்கு பின் கடன் வழங்கப்படும்.
கலைஞர் கடனுதவி திட்டம் குறித்து பலருக்கு தெரியவில்லை. எனவே, அதிகம் பேர் பயன்பெற, அத்திட்டம் குறித்து மாவட்டங்களில் உள்ள குறுந்தொழில் சங்கங்கள், தொழில்முனைவோர்களை அழைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.