/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
செக்கு எண்ணெயை ஒரே பிராண்டில் விற்க 30 நிறுவனங்கள் பதிவு
/
செக்கு எண்ணெயை ஒரே பிராண்டில் விற்க 30 நிறுவனங்கள் பதிவு
செக்கு எண்ணெயை ஒரே பிராண்டில் விற்க 30 நிறுவனங்கள் பதிவு
செக்கு எண்ணெயை ஒரே பிராண்டில் விற்க 30 நிறுவனங்கள் பதிவு
ADDED : ஜூலை 28, 2025 12:57 AM

சென்னை:தமிழக குறுந்தொழில் நிறுவனங்களிடம் இருந்து பனை வெல்லம், செக்கு எண்ணெயை வாங்கி, ஒரே பிராண்டில் மக்களுக்கு விற்க, தமிழக அரசின் டி.என்.எபெக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழில் துவங்குவதை ஊக்குவிக்க, பிரதமர் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில்களை முறைப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் தொழில் துவங்க இயந்திரங்களை வாங்க மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன.
இத்திட்டத்தில், மாநிலம் முழுதும் பலர் பல்வேறு தொழில்களை துவக்கியுள்ளனர். ரசாயன கலப்படம் இன்றி தயாரிக்கப்படும் செக்கு தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் வகைகளுக்கும், பனை வெல்லத்துக்கும், நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிக தேவை உள்ளது.
இதனால், தமிழகத்தில் இந்த பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, ஒரே பிராண்டில் உள்நாட்டில் விற்பதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் இயங்கும் டி.என்.எபெக்ஸ் முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைப்பதுடன், நிறுவனங்களுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும்.
மாநிலம் முழுதும், 900 நிறுவனங்கள் செக்கு எண்ணெய், 400 நிறுவனங்கள் பனைவெல்லம் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளன. அவற்றை தொடர்பு கொண்டு, ஒரே பிராண்டில் விற்பது குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை, செக்கு எண்ணெய்க்கு, 30 நிறுவனங்களும், பனை வெல்லத்துக்கு, 10 நிறுவனங்களும் ஒரே பிராண்டில் விற்க பதிவு செய்துள்ளன.