/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தொழிற்கடன் பெறுபவர்களில் 50 சதவீதம் பேர் மகளிர்' ஆய்வில் தகவல்
/
தொழிற்கடன் பெறுபவர்களில் 50 சதவீதம் பேர் மகளிர்' ஆய்வில் தகவல்
தொழிற்கடன் பெறுபவர்களில் 50 சதவீதம் பேர் மகளிர்' ஆய்வில் தகவல்
தொழிற்கடன் பெறுபவர்களில் 50 சதவீதம் பேர் மகளிர்' ஆய்வில் தகவல்
UPDATED : மார் 06, 2026 01:21 AM
ADDED : மார் 06, 2026 01:18 AM

புதுடில்லி: நாட்டில் தொழிற்கடன் பெறுவோரில் பாதி பேர் மகளிர் என, ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்ற கடன் மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
'சி.ஆர்.ஐ.எப் ஹை மார்க்' என்ற அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த டிச., 2020 முதல் டிச., 2025 வரையிலான காலகட்டத்தில், கடன் பெற்ற மகளிர் எண்ணிக்கையின் ஆண்டு கூட்டு வளர்ச்சி 14.20 சதவீதம் ஆகும். அதாவது, 8.90 கோடி பேர் கடன் பெற்றுள்ளனர்.
மாநிலங்களை பொறுத்தவரை, தமிழகத்தில் அதிக அளவாக 37.50 சதவீத பெண்கள் கடன் வாங்கியுள்ளனர். ஆந்திராவில் இது 34.40 சதவீதமாகவும், கேரளாவில் இது 35 சதவீதமாகவும் உள்ளது. மஹாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா மாநிலங்கள், அதிக கடன் நிலுவை தொகையில் முன்னணியில் உள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.