தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ ஏ.ஐ.எப்., நிறுவனங்களின் சுமையை குறைத்த செபி

 ஏ.ஐ.எப்., நிறுவனங்களின் சுமையை குறைத்த செபி

 ஏ.ஐ.எப்., நிறுவனங்களின் சுமையை குறைத்த செபி


ADDED : மார் 08, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 01:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஏ .ஐ.எப்.,' எனப்படும் 'ஆல்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் பண்டு' நிறுவனங்கள் காலாண்டு அறிக்கை தாக்கல் செய்யும் முறை ரத்து செய்யப்படுவதாக செபி அறிவித்துள்ளது.

தங்களின் முதலீடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விபரங்களை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செபியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இது இந்நிறுவனங்களுக்கு பணிச்சுமையை அதிகரிப்பதாக கருதப்பட்டது.

தற்போது செபி வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையின்படி, காலாண்டு அறிக்கை தாக்கல் செய்யும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி, நிதி ஆண்டு முடிந்தவுடன், 'ஆண்டு செயல்பாட்டு அறிக்கை'யை மட்டும் தாக்கல் செய்தால் போதுமானது.

இருப்பினும், முதலீட்டு திட்டத்தின் வெளிப்படைத் தன்மைக்காக, ஏ.ஐ.எப்., நிறுவனங்கள் தங்களின் தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகள் மற்றும் முக்கியமான மாற்றங்களை அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை நடப்பு நிதியாண்டிலிருந்தே அமலுக்கு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us