ADDED : அக் 18, 2024 12:27 AM

• நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு முடிவுகள், அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருவது போன்ற காரணங்களால், நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள்
இறக்கத்துடன் நிறைவடைந்தன
• வர்த்தகத்தின் ஆரம்பத்தில் சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. இருப்பினும் வர்த்தக இறுதியில் குறியீடுகள் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. நிப்டி குறியீடு, இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டது. சந்தை வீழ்ச்சியால், முதலீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது
• நிப்டி குறியீட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் மட்டும் உயர்வு கண்டன. ரியல் எஸ்டேட், வாகனம் உள்ளிட்ட மற்ற துறை பங்குகள் வீழ்ச்சி கண்டன. சென்செக்ஸ் குறியீட்டில், நுகர்வோர் பொருட்கள் உட்பட பெரும்பாலான துறை பங்குகள் வீழ்ச்சியடைந்தன
• பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவுகள், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால், 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு, அந்நிறுவன பங்குகள்
13 சதவீதம் அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 7,421 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.27 சதவீதம் உயர்ந்து, 74.42 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா குறைந்து 84.06 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
இன்போசிஸ்
டெக் மஹிந்திரா
பவர்கிரிட்
எல்., அண்டு டி.,
எஸ்.பி.ஐ.,
அதிக இறக்கம் கண்டவை
பஜாஜ் ஆட்டோ
ஸ்ரீராம் பைனான்ஸ்
நெஸ்லே இந்தியா
மஹிந்திரா & மஹிந்திரா
ஹீரோ மோட்டோகார்ப்