ADDED : அக் 26, 2024 04:13 AM

• வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் கடும் வீழ்ச்சியுடன் நிறைவுற்றன. வாராந்திர அடிப்படையில், நிப்டி 2.7 சதவீதமும்; சென்செக்ஸ் 2.2 சதவீதமும் சரிவடைந்தன. 2023, ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து நான்காவது வாரமாக சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. மேலும், மாதாந்திர அடிப்படையில், 2020, மார்ச் மாதத்துக்கு பிறகு, சந்தை சந்தித்த மிக மோசமான வீழ்ச்சியாகும் இது
• நேற்று ஆரம்பத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் லேசான உயர்வுடன் துவங்கின. ஆனால், சிறிது நேரத்திலேயே முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்ததால், சந்தை கரடியின் பிடியில் சிக்கியது. இதனால், முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பைசந்தித்தனர்
• நிப்டி குறியீட்டில் அனைத்து துறை பங்குகளும் சரிவை கண்டன. குறிப்பாக, ரியல் எஸ்டேட், உலோகம் மற்றும் மீடியா, எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத்துறை வங்கிகள், வாகனத்துறை சார்ந்த பங்குகள் தலா 5 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்தன. சென்செக்ஸ் குறியீட்டில் 3,087 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும், 856 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும், 78 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றிவர்த்தகமாகின.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று ---3,037 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.42 சதவீதம் அதிகரித்து, 74.69 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 1 பைசா குறைந்து, 84.08 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
ஐ.டி.சி.,
ஆக்சிஸ் வங்கி
பெல்
பிரிட்டானியா
ஹிந்துஸ்தான் யுனிலீவர்
அதிக இறக்கம் கண்டவை
இண்டஸ்இண்ட் வங்கி
அதானி என்டர்பிரைசஸ்
பி.பி.சி.எல்.,
ஸ்ரீராம் பைனான்ஸ்
கோல் இந்தியா