தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ தடம் புரண்ட சந்தை

தடம் புரண்ட சந்தை

தடம் புரண்ட சந்தை


ADDED : நவ 20, 2024 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2024 12:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

• வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன

• நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் துவங்கின. தொடர்ந்து, பிற்பகல் வரை முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். வர்த்தக நேரத்தின் போது, நிப்டி 1.39 சதவீதம் உயர்ந்து 23,780.65 புள்ளிகளும்; சென்செக்ஸ் 1.44 சதவீதம் உயர்ந்து, 78,451.65 புள்ளிகளும் எட்டின

• ஆனால், பிற்பகலில் ரஷ்யாவின் உட்பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த உக்ரைன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. போர் பதற்றம் காரணமாக, வர்த்தகத்தின் கடைசி ஒரு மணி நேரத்தில், பங்குகள் அதிகம் விற்கப்பட்டதால், சந்தை குறியீடுகள் மளமளவென சரிந்தது. இறுதியில் சிறிய உயர்வுடன் நிறைவு செய்தன

• நிப்டி குறியீட்டில், மீடியா, ரியல் எஸ்டேட் துறைகள் சார்ந்த பங்கு விலை அதிக ஏற்றம் கண்டது. மும்பை பங்குச் சந்தையில் 2,353 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும்; 1,612 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்துடனும்; 94 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின

• மஹாராஷ்டிர சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவையொட்டி, இந்திய பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 3,412 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை, நேற்று 0.08 சதவீதம் குறைந்து, ஒரு பேரலுக்கு 73.24 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று எவ்வித மாற்றமின்றி, 84.42 ரூபாயாக இருந்தது.

டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் கண்டவை

 மஹிந்திரா & மஹிந்திரா

 டெக் மஹிந்திரா

 எச்.டி.எப்.சி.,பேங்க்

 டாக்டர் ரெட்டிஸ்

 ஐச்சர் மோட்டார்ஸ்

அதிக இறக்கம் கண்டவை

 எஸ்.பி.ஐ.,லைப்

 ஹிண்டால்கோ

 ரிலையன்ஸ்

 எச்.டி.எப்.சி.,லைப்

 எஸ்.பி.ஐ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us