தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ ஆர்.பி.ஐ., முடிவுகளால் (ஏ)மாற்றம்

ஆர்.பி.ஐ., முடிவுகளால் (ஏ)மாற்றம்

ஆர்.பி.ஐ., முடிவுகளால் (ஏ)மாற்றம்


ADDED : டிச 07, 2024 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2024 01:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

• ஐந்து நாட்கள் உயர்வுடன் முடிவடைந்த சந்தைகள், வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று சிறிய இறக்கத்துடன் நிறைவடைந்தன. வார அடிப்படையில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக நிப்டி, சென்செக்ஸ் குறியீடுகள் உயர்வுடன் நிறைவடைந்தன

• நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, சந்தை குறியீடுகள் ஊசலாட்டத்துடன் துவங்கின. தொடர்ந்து, 11வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி, 6.5 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பை தொடர்ந்து, சந்தை குறியீடுகள் சரிந்தன. தொடர்ந்து, ஊசலாட்டம் நீடித்த நிலையில், வர்த்தக நேர முடிவில் சந்தை சிறிய சரிவுடன் முடிவடைந்தது

• நிப்டி குறியீட்டில் நுகர்பொருட்கள் தவிர்த்து, அனைத்து துறை பங்குகளும் உயர்வு கண்டன. அதிகபட்சமாக ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கிகள் சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகள்

5 சதவீதத்துக்கு மேல் உயர்வு கண்டன. உலோகம், மீடியா மற்றும் ஐ.டி., துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு 4 சதவீதம் உயர்ந்தது

• மும்பை பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 2,399 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 1,590 நிறுவன பங்குகள் குறைந்தும்; 99 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 1,830 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.46 சதவீதம் குறைந்து, 71.76 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா உயர்ந்து, 84.66 ரூபாயாக இருந்தது.

டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் கண்டவை

 டாடா மோட்டார்ஸ்

 பஜாஜ் ஆட்டோ

 ஆக்ஸிஸ் வங்கி

 பி.பி.சி.எல்.,

 டாக்டர் ரெட்டீஸ்

அதிக இறக்கம் கண்டவை

 அதானி போர்ட்ஸ்

 சிப்லா

 பார்தி ஏர்டெல்

 எச்.டி.பி.சி., லைப்

 இண்டஸ்இண்ட் வங்கி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us