தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ அதானி தந்த ஏற்றம்

அதானி தந்த ஏற்றம்

அதானி தந்த ஏற்றம்


ADDED : நவ 28, 2024 02:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2024 02:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

• வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், உயர்வுடன் நிறைவடைந்தன

• அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய சந்தையில் முதலீட்டை துவங்கி இருப்பதால்,நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின

• தொடர்ந்து, அமெரிக்க நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அதானி கிரீன் எனர்ஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, அதானி பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், சந்தை குறியீடுகள் நல்ல ஏற்றத்தை கண்டது

• நிப்டி குறியீட்டில் மருந்து, ரியல் எஸ்டேட் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தவிர, அனைத்து துறை சார்ந்த பங்குகளும் உயர்வு கண்டன. குறிப்பாக, எனர்ஜி துறை பங்குகளை கொண்ட குறியீடு, 1.5 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டது

• மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள 21 துறைகளில், 18 துறைகள் சார்ந்த பங்குகள் உயர்ந்தும்; 3 துறைகள் சார்ந்த பங்குகள் இறக்கத்துடன் வர்த்தகமாகின.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று--- 8 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.63 சதவீதம் அதிகரித்து, 73.23 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா சரிந்து, 84.44 ரூபாயாக இருந்தது.

டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் கண்டவை

 அதானி என்டர்பிரைசஸ்

 அதானி போர்ட்ஸ்

 பெல்

 டிரென்ட்

 என்.டி.பி.சி.,

அதிக இறக்கம் கண்டவை



 அப்பல்லோ ஹாஸ்பிட்டல்

 டைட்டன்

 விப்ரோ

 ஸ்ரீராம் பைனான்ஸ்

 ஹிண்டால்கோ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us