தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : மெதுவாக வளர்ச்சி காணும் அம்புஜா சிமென்ட்ஸ்

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : மெதுவாக வளர்ச்சி காணும் அம்புஜா சிமென்ட்ஸ்

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : மெதுவாக வளர்ச்சி காணும் அம்புஜா சிமென்ட்ஸ்


UPDATED : ஆக 09, 2026 02:49 AM

ADDED : ஆக 09, 2026 02:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2026 02:49 AM ADDED : ஆக 09, 2026 02:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அம்புஜா சிமென்ட்ஸ்' நிறுவனத்தை நரோத்தம் சேக்சாரியா 1985ம் ஆண்டு தொடங்கினார். 1985 முதல் 2006 வரை நிறுவனத்தின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 17 சதவீத கூட்டு வளர்ச்சியுடன், 1 மில்லியன் டன்னிலிருந்து 16 மில்லியன் டன்னாக உயர்ந்தது. கடல்வழி சிமென்ட் வினியோகத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் நிறுவனமாகவும் அம்புஜா திகழ்ந்தது.

நிர்வாக காலம் (2006-22) 'ஹோல்சிம்' நிர்வாகத்தில் அம்புஜா மற்றும் ஏ.சி.சி., நிறுவனங்களின் உற்பத்தித் திறன் வளர்ச்சி ஆண்டுக்கு 5-6 சதவீதமாக குறைந்தது. இதனால் இந்திய சிமென்ட் சந்தையில் இரு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பு 20 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக சரிந்தது.

அதானி குழுமத்தின் வருகை கடனற்ற நிலையில் இருந்த அம்புஜா சிமென்ட்ஸை அதானி குழுமம் கையகப்படுத்தியது. இதன்வாயிலாக 'அதானி சிமென்ட்' இந்தியாவின் 5 பிராந்தியங்களிலும் வலுவான கட்டமைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த சிமென்ட் ஆலைகள், அரைவை மையங்கள் மற்றும் ரெடி-மிக்ஸ் கான்கிரீட் வசதிகள் இதில் அடங்கும்.

Image 1607114


பொருளாதார சவால்கள் சிமென்ட் துறையில் லாபத்தை நிர்ணயிப்பதில் உற்பத்தி, எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள் முக்கியமானவை. அதிக எடை கொண்ட சிமென்டை நீண்ட துாரம் கொண்டு செல்வது செலவு அதிகமானது என்பதால், சுண்ணாம்புக்கல் கிடைக்கும் இடத்திற்கு அருகில் ஆலைகளை அமைப்பதும், எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவை குறைப்பதும் அவசியமாகிறது.

சிமென்ட் துறை வளர்ச்சி இந்திய சிமென்ட் துறையில் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு இருந்தாலும், போட்டியும் கடுமையாக உள்ளது. இந்தியாவின் தனிநபர் சிமென்ட் பயன்பாடு 250 கிலோ மட்டுமே என்பதால், உள்கட்டமைப்பு, வீடமைப்பு மற்றும் நகர மயமாக்கல் வாயிலாக எதிர்கால தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில், தேவையைவிட உற்பத்தி திறன் வேகமாக அதிகரித்து வருகிறது. முன்னணி ஐந்து நிறுவனங்கள் சந்தையின் 60 சதவீதத்தை கட்டுப் படுத்தும் நிலையை நோக்கி நகர்கின்றன.

இதனால் நிதி வலிமை கொண்ட நிறுவனங்கள் பலவீனமான நிறுவனங்களை கையகப்படுத்தும் ஒருங்கிணைப்பு வேகம் அதிகரித்துள்ளது.

கையகப்படுத்துதல் அதானி குழுமம் அம்புஜாவை கையகப்படுத்தியபோது உற்பத்தி திறன் 6 கோடி டன்னுக்கும் சற்று அதிகமாக இருந்தது. தற்போது அது 10.90 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2026-27 நிதியாண்டுக்குள் 11.80 கோடி முதல் 11.90 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிறுவனத்தின் சொந்த நிதியுடன், புரோமோட்டர் செலுத்திய 20,000 கோடி ரூபாய் கூடுதல் முதலீடும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இயற்கையான வளர்ச்சியுடன், 31.50 எம்.டி.பி.ஏ., உற்பத்தி திறனை வழங்கும் மூன்று நிறுவன கையகப்படுத்துதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரலாறு 'ஓரியன்ட்' நிறுவனத்தை அதானி குழுமம் விரைவாக ஒருங்கிணைத்தது. ஆனால் 'சங்கி மற்றும் பென்னா' போன்ற பழைய பிரவுன்பீல்டு ஆலைகளுக்கு தேவையான சீரமைப்பு காலம் மற்றும் முதலீட்டை ஆரம்பத்தில் குறைவாக மதிப்பிட்டது.

பெரிய அளவிலான புனரமைப்பு காரணமாக சங்கி ஆலையின் செயல்பாட்டு சீரமைப்பு இரண்டு ஆண்டுகள் தாமதமானது. 2025 இறுதியில் உற்பத்தித் திறன் பயன் பாடு மீண்டது.

பென்னா ஆலையின் உற்பத்தி திறன் பயன்பாடு 40 சதவீதமாகவே உள்ளது. தென்னிந்தியாவில் 1 கோடி டன் அளவுக்கு அதிகப்படியான சிமென்ட் வரத்து மற்றும் பராமரிப்பு முடக்கங்கள் செயல் திறனை பாதித்துள்ளன. விற்பனை அளவை காட்டிலும் விலைக்கு முன்னுரிமை அளிக்கும் உத்தி பின்பற்றப்படுகிறது.

ஓரியன்ட் நிறுவனம் விரைவாக ஒருங்கிணைக்கப்பட்டு, 2026 நடுப்பகுதியில் 87 சதவீத உற்பத்தி திறன் பயன்பாட்டை எட்டியுள்ளது. அதிக முதலீடு இல்லாமல் மும்பை மற்றும் மேற்கு இந்திய சந்தைகளில் வலுவான நிலையை பெற்றுள்ளதால், கையகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் அதிக லாபம் தரும் நிறுவனமாக மாறியுள்ளது.

குறையும் லாப வரம்பு டன் ஒன்றுக்கான செயல்பாட்டு லாபத்தை 1,125 ரூபாயில் இருந்து 2028 நிதியாண்டுக்குள்.1,500 ரூபாயாக உயர்த்தவும், உற்பத்தி செலவை 3,650 ரூபாயாக குறைக்கவும் அதானி குழுமம் திட்டமிட்டிருந்தது.

ஆனால் அதிகரித்த செலவுகள் மற்றும் கையகப்படுத்துதல்களின் நிதிச்சுமை காரணமாக இந்த இலக்குகள் தாமதமாகின்றன.

கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் டன் ஒன்றுக்கான செயல்பாட்டு லாபம் 718 ரூபாய் வரை குறைந்தது. சரக்கு கூலி, பேக்கேஜிங், எரிபொருள் மற்றும் மாநில வரி உயர்வால் நான்காம் காலாண்டில் உற்பத்தி செலவு டன் ஒன்றுக்கு 4,500 ரூபாயை நெருங்கியது.

இலக்கு மாற்றம் வரும் 2028 நிதியாண்டுக்குள் 140 எம்.டி.பி.ஏ., உற்பத்தி திறனை அடையும் இலக்கு பின்னர் 155 எம்.டி.பி.ஏ., ஆக உயர்த்தப்பட்டது. தற்போது அந்த இலக்கை அடையும் காலக்கெடு 2030 நிதியாண்டு வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

காலாண்டு முடிவுகள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வருவாய் 9,500 கோடி ரூபயாகவும், செயல்பாட்டு லாபம் 1,589 கோடி ரூபாயாகவும் இருந்தது. பசுமை மின்சார பயன்பாடு அதிகரித்ததாலும், கிளின்கர் பயன்பாடு குறைந்ததாலும் உற்பத்தி செலவு குறைந்து, டன் ஒன்றுக்கான லாபம் 931 ரூபாயாக மீண்டது.

நிகர லாபம் 660 கோடி ரூபாயாக இருந்ததுடன், நிறுவனம் தொடர்ந்து கடனற்ற நிலையில் உள்ளது. விலையை பாதுகாக்கும் நோக்கில் குறைந்த லாபம் தரும் சில விற்பனைகளை நிர்வாகம் தவிர்த்ததால், விற்பனை அளவு 1.710 கோடி டன்னாக குறைந்தது.

நீண்டகால செலவு குறைப்பு நடவடிக்கைகளே நிறுவனத்தின் மதிப்பீட்டுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளன. அதானி குழுமத்தின் பிற துறைகளுடனான ஒருங்கிணைப்பு அதிகரிப்பதால், எதிர்காலத்தில் லாப வரம்பு விரிவடைய வாய்ப்பு உள்ளது.

பசுமை ஆற்றல் வாய்ப்பு: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை 1,100 மெகா வாட்டிற்கு மேல் உயர்த்தும் திட்டம் மின்சார செலவை குறைக்க உதவும்.

மூலப்பொருள் ஒருங்கிணைப்பு: அதானி குழுமத்தின் மின்சார கட்டமைப்பு வாயிலாக நிலக்கரி மற்றும் சாம்பல் வினியோகத்தை உறுதி செய்வதால் எரிபொருள் செலவை குறைக்க முடியும்.

Image 1607114


போக்குவரத்து சீரமைப்பு: ஒட்டுமொத்த செலவில் 25 சதவீதம் வரை உள்ள சரக்கு கூலியை குறைக்க பிரத்யேக ரயில் பெட்டிகள், கடலோர முனையங்கள் மற்றும் சரக்கு வழித்தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

முதலீட்டு நோக்கு அதானி குழுமத்தின் ஒருங்கிணைந்த பலன்கள் டன் ஒன்றுக்கு 1,500 ரூபாய் செயல்பாட்டு லாப இலக்காக எவ்வளவு வேகமாக மாறும் என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது. அண்மைய மேலாண்மை மாற்றங்கள் திட்டமிட்டதை விட செயல்பாடுகள் மெதுவாகவே நடப்பதை உறுதிசெய்கின்றன.

பொறுப்புதுறப்பு இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்தப் பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டிருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டிருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us