தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ புளூ ஸ்டார் கிராம்டன் பங்குகள் வீழ்ச்சி

 புளூ ஸ்டார் கிராம்டன் பங்குகள் வீழ்ச்சி

 புளூ ஸ்டார் கிராம்டன் பங்குகள் வீழ்ச்சி


ADDED : ஆக 09, 2026 02:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 02:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதல் காலாண்டு நிதி முடிவுகளால் 'புளூ ஸ்டார், கிராம்டன் கிரீவ்ஸ்' நிறுவன பங்குகள் 7 சதவீதத்துக்கு மேல் சரிந்தன.

மூலப்பொருட்கள் விலை உயர்வு, கோடைகாலம் தாமதமாக தொடங்கி விரைவிலேயே முடிந்ததால் ஏசி, விசிறி விற்பனை சரிவு, ஏசி கையிருப்பு தேக்கம் மற்றும் பலவீனமான தேவையால் விலையை உயர்த்த முடியாதது இதற்கு காரணங்களாக கூறப்படுகிறது.

புளூ ஸ்டார் நிறுவனத்தின் வருவாய் 13.30 சதவீதம் உயர்ந்த போதிலும் நிகர லாபம் 15.30 சதவீதம் குறைந்து 102.50 கோடி ரூபாயானது. கிராம்டன் கிரீவ்ஸ் நிறுவனத்தின் வருவாய், லாபம் உயர்ந்த போதிலும் செயல்பாட்டு லாப வரம்பு அழுத்தம், வினியோக சவால்களால் சரி ந்தது.

பண்டிகை காலத்தில் தேவை அதிகரிக்கும் போது இப் பாதிப்பு சரியாகும் என வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில், புளூ ஸ்டார் பங்கு 3.53 சதவீதம் வீழ்ச்சியுடன் 1,514 ரூபாயிலும், கிராம்டன் கிரீவ்ஸ் பங்கு 7.43 சதவீதம் வீழ்ச்சியுடன் 249.95 ரூபாயிலும் நிறைவடைந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us