/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'தொழில்நுட்பத்தால் ஆடிட்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்'
/
'தொழில்நுட்பத்தால் ஆடிட்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்'
'தொழில்நுட்பத்தால் ஆடிட்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்'
'தொழில்நுட்பத்தால் ஆடிட்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்'
ADDED : டிச 14, 2024 12:22 AM

சென்னை:'தி சொசைட்டி ஆப் ஆடிட்டர்ஸ்' அமைப்பின் சார்பில், கருத்தரங்கம், சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடந்தது. இதில், செயலர் மகேஷ் கிருஷ்ணன் பேசியதாவது:
நிறுவனத்தின் நிதி அறிக்கைகள், சில ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு ஆவணமும் நேரடியாக பெற்று தயாரிக்கப்பட்டன; தற்போது, தொழில்நுட்பங்களின் வருகையால், அவை இணையதளம் வாயிலாக ஒரே தளத்தில் பெறப்படுகிறது.
தொழில்நுட்பங்களால், ஆவணங்களில் திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது. எனவே, ஆடிட்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அதேபோல், நிறுவனத்தின் இயக்குனர்களும், உரிமையாளர்களும் தவறு நடக்காமல் இருப்பதை தடுக்க, கவனமுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.