/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
திராட்சையை விஞ்சிய வாழைப்பழ ஏற்றுமதி
/
திராட்சையை விஞ்சிய வாழைப்பழ ஏற்றுமதி
ADDED : ஜூன் 21, 2025 01:31 AM

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பழமாக, வாழைப்பழம் மாறி உள்ளது. கடந்த 2018ம் நிதியாண்டு ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில், ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.
இதுவரை இந்தியாவிலிருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த திராட்சையை கடந்த நிதியாண்டில் வாழைப்பழம்
பின்னுக்குத் தள்ளி முன்னேறி உள்ளது.
ஏற்றுமதி அதிகரிப்புக்கு விலைக்குறைவும், மத்திய கிழக்கு நாடுகளின் தேவை அதிகரிப்புமே காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நடப்பு நிதியாண்டிலும் ஏற்றுமதி கடந்த நிதியாண்டைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் திராட்சை ஏற்றுமதி, 16 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், வாழைப்பழ ஏற்றுமதி ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.