தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/வாரம் 5 நாள் வேலை கேட்டு இன்று வங்கி ஸ்டிரைக்

வாரம் 5 நாள் வேலை கேட்டு இன்று வங்கி ஸ்டிரைக்

வாரம் 5 நாள் வேலை கேட்டு இன்று வங்கி ஸ்டிரைக்


UPDATED : ஜன 27, 2026 02:09 PM

ADDED : ஜன 27, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2026 02:09 PM ADDED : ஜன 27, 2026 01:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

வங்கி ஊழியர்களுக்கு, மாதத்தின் இரண்டு, நான்காம் சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் வார விடுமுறை. மீதமுள்ள இரண்டு சனிக்கிழமையும் விடுமுறை விடக்கோரி, ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் அமைப்பான யு.எப்.பி.யு., சார்பில், ஜன., 27 (இன்று) நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

சனிக்கிழமை விடுமுறையால் ஏற்படக்கூடிய பணி நேரத்தை, திங்கள் முதல் வெள்ளி வரை கூடுதலாக 40 நிமிடம் பணியாற்ற ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அரசு இதுவரை அதை அறிவிக்காமல் உள்ளது. அரசுடன் நடத்தப்பட்ட விரிவான பேச்சிலும், எங்கள் கோரிக்கை மீது உறுதி அளிக்கப்படாததால், வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

வேலைநிறுத்தத்தால் பொதுத்துறை வங்கிகளில் ரொக்க டிபாசிட், ரொக்கம் எடுத்தல், காசோலை கிளியரிங் பாதிக்கும் யு.பி.ஐ., பரிவர்த்தன, இணையவழி பேங்கிங் பாதிக்காது; சில இடங்களில் ஏ.டி.எம்., ரொக்கம் வழங்காத நிலை வரலாம் ஹெச்.டி.எப்.சி., - ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ் போன்ற தனியார் வங்கிகள் பங்கேற்காததால், அவற்றின் சேவை பாதிக்கப்படாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us