தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ இளைஞர்களை கவரும் பத்திர முதலீடு

இளைஞர்களை கவரும் பத்திர முதலீடு

இளைஞர்களை கவரும் பத்திர முதலீடு


ADDED : அக் 07, 2024 12:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2024 12:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பத்திரங்களில் முதலீடு செய்வது அதிகரித்திருப்பதும், குறிப்பாக இளம் தலைமுறையினர் பத்திரங்களில் அதிகம் முதலீடு செய்வதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பத்திரங்களில் முதலீடு செய்வதை பரவலாக்கும் வகை யில், குறைந்தபட்ச முதலீடு தொகையை 10,000மாக குறைத்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், தனியார் நிதிச்சேவை நிறுவனமான கிரிப் இன்வெஸ்ட் தன் மேடையில் மேற்கொள்ளப்படும் பத்திரங்கள் முதலீட்டை அடிப்படையாக கொண்டு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

பத்திர முதலீடு மேற்கொள்பவர்களில், 63 சதவீதம் இளம் தலைமுறையினராக இருப்பதாகவும், சராசரி பத்திர முதலீடு 1.8 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. வர்த்தக பத்திர முதலீட்டில் பெண்கள் பங்கேற்பும், 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

பத்திர முதலீடு மேற்கொள்பவர்கள் பெரு நகரங்களில் மட்டும் அல்லாமல், இரண்டாம் அடுக்கு நகரங்களிலும் பரவியிருக்கின்றனர். முன்னணி நகரங்களை விட மற்ற நகரங்களில் முதலீட்டாளர்களே முதலீட்டில், 50 சதவீதத்திற்கு மேல் பங்கு வகிக்கின்றனர்.

பத்திரங்களை அணுகுவது எளிதாகி இருப்பதோடு, இளம் தலைமுறையின் இடர்தன்மை, டிஜிட்டல் முதலீடு அனுபவம் ஆகியவை பத்திரங்கள் முதலீட்டில் அதிகரிக்கும் ஆர்வத்திற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us