/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சேலம் விமான நிலையத்தில் விரைவில் சரக்கு போக்குவரத்து
/
சேலம் விமான நிலையத்தில் விரைவில் சரக்கு போக்குவரத்து
சேலம் விமான நிலையத்தில் விரைவில் சரக்கு போக்குவரத்து
சேலம் விமான நிலையத்தில் விரைவில் சரக்கு போக்குவரத்து
ADDED : ஏப் 04, 2025 11:26 PM

ஓமலுார், ஏப். 5--
'இண்டிகோ' விமான நிறுவனம், சேலம் விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணியர் விமான சேவையை இயக்கி வருகிறது.
இந்நிலையில், இண்டிகோ விமான நிறுவனம், சரக்கு சேவை வசதியை விரைவில் துவங்க உள்ளது.
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் பகுதிகளுக்கு, பயணியர் விமானத்தில், 250 முதல் 300 கிலோ வரையான சரக்கு போக்குவரத்து வசதியை துவங்க திட்டமிட்டுள்ளது.
அதற்கான வசதிகள் குறித்து, இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தபால் உள்ளிட்ட சிறு வகை சரக்கு போக்குவரத்தை செயல்படுத்த அனுமதிக்க, விமான பாதுகாப்பு ஆணையம் பரிசீலித்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.