/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பணவீக்கம் உள்ளிட்ட தரவுகள் வெளியிடும் நேரம் மாற்றம்
/
பணவீக்கம் உள்ளிட்ட தரவுகள் வெளியிடும் நேரம் மாற்றம்
பணவீக்கம் உள்ளிட்ட தரவுகள் வெளியிடும் நேரம் மாற்றம்
பணவீக்கம் உள்ளிட்ட தரவுகள் வெளியிடும் நேரம் மாற்றம்
ADDED : நவ 06, 2024 11:59 PM

மும்பை:நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான சில்லரை விலை பணவீக்கம் மற்றும் தொழில்துறை உற்பத்தி தொடர்பான தரவுகளை வெளியிடுவதற்கான நேரத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக, மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒவ்வொரு மாதமும் 12ம் தேதி மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டு வந்த இந்த தரவுகள், இம்மாதத்திலிருந்து மாலை நான்கு மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் தேதி விடுமுறையாக இருக்கும்பட்சத்தில், நுகர்வோர் விலை குறியீடு தரவு அதற்கு அடுத்த நாளும்; தொழில்துறை உற்பத்தி தரவு அதற்கு முந்தைய நாளும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவுகளை ஆராய அதிக நேரம் கிடைப்பதை உறுதி செய்யும் அதே நேரத்தில், பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு இடையூறு விளைவிக்காதபடி, வர்த்தகம் நிறைவடைந்த பிறகே தரவுகள் வெளியிடப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துஉள்ளது.
தரவுகள் வெளியிடப்படுவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் அதனை எளிதாக அணுகுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற அமைச்சகத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவுகளை ஆராய அதிக நேரம் கிடைப்பதை உறுதி செய்ய உதவும் வகையில், இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது