/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இந்திய பொருட்கள் இறக்குமதி தாராளம் காட்டும் சீனா
/
இந்திய பொருட்கள் இறக்குமதி தாராளம் காட்டும் சீனா
ADDED : ஏப் 02, 2025 11:50 PM

புதுடில்லி:இந்திய பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக, சீனா தெரிவித்து உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், சீனாவின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது.
இந்தியா - சீனா இடையே ராஜதந்திர உறவுகள் நிறுவி, 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சீன அதிபர் ஜின்பிங் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 'இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவு, மேலும் நெருக்கமடைய வேண்டும்' என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்தியாவுக்கான சீன துாதர் சூ பெய்ஹாங், பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துஉள்ளதாவது:
இந்தியாவின் பக்கம் நின்று, வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சீன சந்தைக்கு நன்கு பொருந்தக்கூடிய, ஏராளமான இந்திய தயாரிப்புகளை இறக்குமதி செய்யவும் தயாராக உள்ளோம்.
சீனாவில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள, இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இதன் வாயிலாக, சீனாவின் மேம்பாட்டில், நன்மைகளை பகிர்ந்து கொள்ளலாம்.
விரைவில், இரு நாடுகளுக்கும் நன்மையை தரக்கூடிய வகையில், சீன நிறுவனங்களுக்கு நியாயமான, வெளிப்படையான வணிக சூழலை இந்தியா ஏற்படுத்தும் என, நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

